fbpx

#Covid-19: 24 மணி நேரத்தில் 20,408 பேருக்கு வைரஸ் பாதிப்பு…! 54 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,408 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 54 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,40,00,138 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,33,30,442 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,312 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,03,94,33,480 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,87,173 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

அமெரிக்க இளைஞரை வீடியோ கான்பரன்சிங் மூலம் கரம்பிடிக்க தமிழக பெண்ணுக்கு அனுமதி..! - உயர்நீதிமன்ற கிளை

Sat Jul 30 , 2022
அமெரிக்க இளைஞருடன் தமிழக பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்ய உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி (வயது 28), என்ற பெண் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ”தான் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரும் […]
’ஞாயிற்றுக்கிழமை உங்க விருப்பம்தான்’..!! ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு இப்படி ஒரு தீர்ப்பா..?

You May Like