fbpx

சென்னை வாசிகளே…! மழை பாதிப்பு குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க அவசர உதவி எண்..! முழு விவரம்

பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு மீட்பு குழுவிலும் ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 10 காவலர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் மீட்புப் பணிகளுக்காக தலா ஒரு வாகனம் வாகனங்கள், ரப்பர் படகு, ஜாக்கெட்டுகள், கயிறு உள்ளிட்ட என 12 மிதவை மீட்பு 21 உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மீட்பு குழுவினருக்கு நீச்சல், மீட்புப் பணிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தாற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்களுடன் 24 மணி நேரம் சுழற்சி முறையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அரசு துறைகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மழை பெய்யும்போது மின் கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விழுந்து கிடக்கும் கம்பிகள் அல்லது கம்பிகளைத் தொடக் கூடாது. பேரிடர் மீட்புப் படை எந்த ஒரு துயரச் சூழலையும் கையாள தயாராக உள்ளது. அவசர தேவைக்கு காவல் துறையின் இலவச தொலைபேசி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். சென்னை காவல்துறை போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ISRAEL-HAMAS WAR : 'இதுபோன்ற பிரச்சனைகளில் ஒருபோதும் சண்டையிட்டதில்லை, அதனால்தான் நாங்கள் இந்துக்கள்': ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!

Sun Oct 22 , 2023
இந்து மதம் அனைத்துப் பிரிவினரையும் மதிக்கிறது, ஹமாஸ்-இஸ்ரேல் போருக்கு வழிவகுத்தது போன்ற பிரச்சனைகளில் இந்தியா ஒருபோதும் மோதல்களைக் கண்டதில்லை என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவின் 350 ஆண்டுகளை முன்னிட்டு, ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், இந்து மதம் அனைத்துப் பிரிவினரையும் மதிக்கிறது, ஹமாஸ்-இஸ்ரேல் […]

You May Like