மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பற்றாக்குறையே இந்த நிகழ்விற்கு காரணம் என மருத்துவமனை டீன் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய நாந்தெட்டின் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன்; கடந்த 24 மணி நேரத்தில் 12 பெரியவர்கள் மற்றும் 12 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததற்கு மருந்துகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பற்றாக்குறை தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள், மருத்துவமனையில் சிகிச்சையின் தரம் மற்றும் மருந்து கிடைப்பது குறித்து கவலைகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. பன்னிரண்டு பெரியவர்களும் பல்வேறு நோய்களால் இறந்தனர், பல்வேறு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் நாங்கள் சில சிரமங்களை எதிர்கொண்டோம், ”என்று மருத்துவமனையின் டீன் கூறினார்.