fbpx

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் + கருணைத் தொகை…! தமிழக அரசுக்கு கடிதம்…

2023-24-ம் நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட்டு, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் எழுதிய கடிதத்தில்; தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2023-24-ம் நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட்டு, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

மேலும், ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்கள், உணவகத்தில் பணிபுரிவோர், பஸ்பாடி கிளீனர், சுகாதார பணியாளர்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பணிபுரிந்து வரும் டிக்கெட் கான்வாசர் உள்ளிட்டோருக்கும் 2023-24 நிதியாண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவருக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்.

கடந்த நிதியாண்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி கணக்கிட்டு, போனஸ் வித்தியாசம், நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

English Summary

25 percent bonus + gratuity for transport workers

Vignesh

Next Post

சாலையில் ஜாலியாக உலா வரும் அஜித் - ஷாலினி..!! இணையத்தை வளைத்துப் போட்ட வைரல் வீடியோ..!!

Mon Oct 7 , 2024
Ajith-Shalini's latest video is going viral on social media.

You May Like