fbpx

தூள்..! அரசு பணியாளர்களுக்கு ரூ.25,000 உயர்கல்வி ஊக்கத்தொகை…! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…!

அரசுப் பணியாளர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை எவ்வளவு வழங்கப்படும் என தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; முனைவர் பட்டம் பெற்றால் ரூ.25,000 ஊக்க ஊதியத்தொகையும் , பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவர்க ளுக்கு ரூ.20,000 , பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருந்தால் ரூ.10,000 வீதம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அரசாணைப்படி 2020-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று ஊக்கத்தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்த நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை

அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு www.bcmbcmw.tn.gov.in/welfschemes.html என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

பெரும் சோகம்!… விமான விபத்தில் கைக்குழந்தை உட்பட 12 பேர் பலி!… பிரேசிலில் பயங்கரம்!

Mon Oct 30 , 2023
பிரேசிலின் அமேசான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் கைக்குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர். விமான விபத்து தொடர்பாக பிரேசிலின் மேற்கு மாநிலமான ஏக்கர்(Acre) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள பிரதான விமான நிலையத்திற்கு அருகில் ஒற்றை எஞ்சின் செஸ்னா கேரவன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில், ஒரு கைக்குழந்தை உட்பட பத்து பயணிகள் […]

You May Like