fbpx

Farmers: விவசாயிகளிடமிருந்து 262.48 லட்சம் டன் கோதுமை கொள்முதல்‌…!

விவசாயிகளிடமிருந்து நேரடியாக இதுவரை 489.15 லட்சம் டன் அரிசிக்கு ஈடான 728.42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2024-25 ரபி சந்தைப் பருவத்தில் நாட்டில் உள்ள முக்கிய கொள்முதல் மாநிலங்களில் கோதுமைக் கொள்முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மத்தியத் தொகுப்பிற்கு இதுவரை 262.48 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 262.02 லட்சம் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது. 2024-25 ரபி சந்தைப் பருவத்தில் மொத்தம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.59,715 கோடி வழங்கப்பட்டு 22.31 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

நெல் கொள்முதலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2023-24 கரீஃப் சந்தைப் பருவத்தில் ரூ.1,60,472 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு 98.26 லட்சம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக இதுவரை 489.15 லட்சம் டன் அரிசிக்கு ஈடான 728.42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளை அடுத்து மத்தியத் தொகுப்பில் கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய இருப்பு 600 லட்சம் டன்னைக் கடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஜூன் 4 தேர்தல் முடிவுகள்.! ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு…! தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

Sat May 25 , 2024
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு. பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் […]

You May Like