fbpx

இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை… சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

தைப்பூசம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இன்று முதல் 9-ம் தேதி வரை வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் வருவதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7,8 ஆகிய தேதிகளில் 910 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

3-day holiday from today… Special buses operating from Chennai

Vignesh

Next Post

இறந்தவரின் ஆடைகளை வேறொருவர் அணியலாமா..? - கருட புராணம் கூறுவது இதோ..!

Fri Feb 7 , 2025
What happens if someone else wears the clothes of the dead?

You May Like