சதீஸ்கர் மாநிலத்தில், வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, மூன்று கயவர்கள் 17 வயது சிறுமி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், இருக்கக்கூடிய ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் வேலை தேடிக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயின் சிக்கந்தர் என்பவர், அந்த சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
அந்த நபர் சொன்னதை நம்பிய அந்த 17 வயது சிறுமி அவர் வர சொன்ன இடத்திற்கு கடந்த 19ஆம் தேதி சென்றுள்ளார். பின்பு சிக்கந்தர் அங்கு இருந்த தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பிறகு அவர்கள் இருந்த கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்ற மூவரும், வேலை கொடுப்பதற்கான ஆவணங்களை வழங்கி விட்டு வரலாம் என்று அந்த சிறுமியிடம் தெரிவித்து, கீழ் தளத்திற்கு கூட்டி சென்றதாக தெரிகிறது.
அங்கே வைத்து சிக்கந்தரும், அவருடைய நண்பர்கள் இரண்டு பேரும், சேர்ந்து, அந்த 17 வயது சிறுமியை கதற கதற கற்பழித்துள்ளனர். ஆனால், தன்னை விட்டு விடுமாறு எவ்வளவோ அந்த சிறுமி கதறியும் அதை கண்டு கொள்ளாத காமுகன்கள் மூவரும், அந்த சிறுமியை கதற, கதற கற்பழித்துள்ளனர். இதன் பிறகு, இது பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்து விடுவோம் என்று அந்த சிறுமியை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் பின்னர் வீட்டுக்கு வந்த 17 வயது சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடூரத்தை பற்றி தெரிவித்து, அவர்களிடம் கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு உறைந்து போன பெற்றோர்கள், உடனடியாக காவல்துறையினரிடம் புகார் வழங்கினர்.
அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த 17 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிக்கந்தர் உட்பட அவருடைய நண்பர்கள் இரண்டு பேரையும் சேர்த்து, மூவரையும் அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.