fbpx

25 வயது வாலிபர் முதல், 85 வயது முதியவர் வரை, பலருக்கு ஒரே சிறுமி மீது ஏற்பட்ட மோகம்; 3 பேரால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்..

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது தந்தை உயரிழந்த நிலையில், இவர் தனது தாய் மற்றும் சகோதரரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில், 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த ஜன.24 ஆம் தேதி அன்று தனது சித்தி வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

அப்போது சிறுமியின் சித்தப்பாவிற்கு சிறுமியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத போது, சிறுமியின் சித்தப்பா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் உனது அம்மா மற்றும் அண்ணனை கொலை செய்திடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனிடையே, கடந்த பிப்.14 அன்று சிறுமி தனது பாட்டி ஊரின் திருவிழாவுக்கு சென்றுள்ளார். அங்கு 25 வயதான சிறுமியின் உறவுக்கார் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். திருமணமான அவருக்கும் சிறுமி மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறுமியை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த்து வரும் 85 வயது முதியவருக்கும் சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரும் சிறுமியை தனியாக அழைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது தோழியிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தோழி, தனது ஆசிரியரின் உதவியுடன் குழந்தைகள் நலத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா, 25 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை பலாத்காரம் செய்த 85 வயது முதியவர் படுத்தப்படுகையாக இருப்பதால், அவரை கைது செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Read more: விடிய விடிய தோழிகளுடன் மது குடித்த கல்லூரி மாணவி..!! போதை தெளிந்ததும் மரணம்..!! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

3 men sexually abused a school girl

Next Post

வட்டி மட்டும் ரூ. 2 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸின் சிறந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tue Mar 4 , 2025
Interest only Rs. 2 lakhs will be available.. Do you know about the best scheme of the Post Office..?

You May Like