fbpx

அங்கன்வாடி மையங்களில் இனி 3 முட்டை… முதலமைச்சர் அறிவிப்பு!!

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் 3 முட்டைகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என உயர்த்தி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் முட்டை, பயறு வகைகள் வழங்கப்படுகின்றது. அதே போல அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் சத்து மாவு, முட்டை, சத்து மாவு உருண்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக அங்கன்வாடி மையங்களில் 1-2 வயது குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்படுகின்றது. 2-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது’’ என்று கூறினார்.

அங்கன்வாடிகளில் வழங்கப்படும் முட்டைகளை கோழிப்பண்ணையாளர்களிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்கின்றது. முதல்வரின் இந்த அறிவிப்பு மூலம் நாமக்கல் கோழிப்பண்ணைகளில் இருந்து கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் கொள்முதல் ஆகும் என்பதால் கோழிப்பண்ணையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Post

அபராதம் செலுத்தாததால் சாவியை பிடுங்கிக்கொண்ட போலீஸ்… மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணி தவிப்பு….

Mon Nov 21 , 2022
இருசக்கர வாகனத்தில் கர்ப்பமான மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது அபராதம் செலுத்தச்சொல்லி போலீஸ் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் கர்ப்பிணி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் 3 பேர் வந்ததாக கூறி அபராதம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியும் அவர் கேட்கவில்லை. நாங்கள் அவசரமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்கின்றோம். எனது உறவுக்கார பெண்மணி […]

You May Like