fbpx

3 முறை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..

பிரபல பாப் இசையமைப்பாளர் பர்ட் பச்சராக், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பியானோ கலைஞர் என பன்முக திறமைக் கொண்டவர் பர்ட் பச்சராக்.. இவர் 50 ஆண்டுகளாக அமெரிக்க பாப் இசையில் புகழ்பெற்று விளங்கினார்.. மேலும் பாடலாசிரியர் ஹால் டேவிட்டுடன் இணைந்து பர்ட் எழுதிய பாடல்கள் மிக பிரபலமானவையாக இருந்தன.. இதன் மூலம் 20 ஆம் நூற்றாண்டின மிக முக்கியமான பாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

This Guy’s in Love with You” (1968), “Raindrops Keep Fallin’ on My Head” (1969), “(They Long to Be) Close to You” (1970), “Arthur’s Theme (Best That You Can Do)” (1981), and “That’s What Friends Are For” (1986) உள்ளிட்ட பல பிரபலமான பாப் இசை ஆல்பங்களை பர்ட் எழுதி இசையமைத்துள்ளார்.. டியோன் வார்விக், அரேதா பிராங்க்ளின், டஸ்டி ஸ்பிரிங்ஃபீல்ட் மற்றும் டாம் ஜோன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களுன் அவர் இணைந்து பணியாற்றி உள்ளார்..

பர்ட் பச்சராச், 3 ஆஸ்கர் விருதுகள், 2 கோல்டன் குளோப் விருது மற்றும் 6 கிராமி விருதுகளை வென்றார்.. மேலும் 2008ல், இசைக்கான வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருதை பெற்றார்.. மேலும், பர்ட் பச்சராச் 1990கள் மற்றும் 2000களில் திரைப்படங்களில் நடித்தார்.. அவர் 1997 ஆம் ஆண்டு உளவு நகைச்சுவை திரைப்படமான “ஆஸ்டின் பவர்ஸ்: இன்டர்நேஷனல் மேன் ஆஃப் மிஸ்டரி” என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்..

இந்நிலையில் பர்ட் பச்சராச் லாஸ் ஏஞ்சல்ஸில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. அவருக்கு ஜேன் என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.. அவரின் மறைவுக்கு பாப் இசைக்கலைஞர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

எழுதாத பேனாவுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு தேவையா….?எடப்பாடி பழனிச்சாமி விளாசல்….!

Fri Feb 10 , 2023
திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டனர். அதற்குள் அந்த கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எப்போதுமே ஆளும் தரப்பாக இருந்தால் எதிர் தரப்பிடம் இருந்து நிச்சயம் விமர்சனங்கள் வருவது இயல்பான விஷயம்தான் என்றாலும் கூட, ஆளும் கட்சி பதில் சொல்ல முடியாத அளவிற்கு எதிர்க்கட்சி விமர்சனம் செய்கிறது என்றால் தவறு ஆளும் தரப்பிடம் தான் இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. எல்லோருமே ஆளும் தரப்பாக […]

You May Like