கிருஷ்ணகிரி அருகே ஒரு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவியை வீடு தேடி சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுமியின் தாயார், “எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருகலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம்” என்றார்.
இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம் என்றும், மூன்று பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது. உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களான சின்னச்சாமி, பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும் உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 3 ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்களை தங்கள் முன் கொண்டு வர வேண்டும் என்று ஆவேசமாக பேசி வருகின்றனர்.
Read more :ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!