fbpx

இறுதி கட்டம்..! 3 ஆண்டு சிறை தண்டனை..! பொன்முடியின் வழக்கை நாளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!

பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் கடந்த 2016-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அவருக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Vignesh

Next Post

பாய்ந்தது வழக்கு.! "10,000 பேரை எறக்கி காட்டவா.?.." சவால் விட்ட அண்ணாமலை.! பொதுமக்கள் பரபரப்பு புகார்.!

Thu Jan 11 , 2024
.பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்று வருகிறார் . கடந்த வருடம் ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தனது பயணத்தை துவக்கினார். தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழைக்கு பிறகு தனது அடுத்த கட்ட பயணத்தை துவங்கி […]

You May Like