fbpx

சீனாவில் 35 பேர் பலி!. தறிகெட்டு ஓடிய கார்!. ஸ்போர்ட்ஸ் சென்டர் மீது மோதி கோர விபத்து!.

China Accident: சீனாவில் ஸ்போர்ட்ஸ் சென்டர் மீது கார் மோதிய கோர விபத்தில் 35 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த ஜுஹாய் ஏர்ஷோவுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

Readmore: எவ்வளவு பெரிய தொப்பையாக இருந்தாலும் 14 நாட்களில் குறைக்கலாம்..? இந்த ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Man kills at least 35, injures dozens after ramming car into sports center in China

Kokila

Next Post

திராவிட வரலாறு பேசியே... சுதந்திர போராட்ட வீரர்களே சிந்திக்க மறந்துட்டாங்க...! ஆளுநர் ரவி கருத்து

Wed Nov 13 , 2024
Talking about Dravidian history... you forgot to think about freedom fighters.

You May Like