fbpx

ஒரே நாளில் 37 மீனவர்கள் கைது… இலங்கை அட்டூழியத்திற்கு உடனே முற்றுப்புள்ளி..! டிடிவி கோரிக்கை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மூன்று மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த 50 நாட்களில் மட்டும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுகோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, நேற்று மேலும் 37 பேரை கைது செய்தனர். இதற்கு முழு தீர்வு வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மூன்று மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த 50 நாட்களில் மட்டும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுகோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, நேற்று மேலும் 37 பேரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என இலங்கை கடற்படையின் தொடர் அராஜகப் போக்கு, தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கிலும், மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடும் வகையிலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

37 fishermen arrested in a single day…Sri Lankan atrocity ends immediately

Vignesh

Next Post

2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு...!

Sun Sep 22 , 2024
Exam results for filling 2,676 vacancies

You May Like