fbpx

#திண்டுக்கல்: விளையாட்டே விபரீதம் ஆகி போனது.. தனக்கே தெரியாமல் சால்வையில் தூக்கு போட்ட 3ம் வகுப்பு சிறுமி..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள மெட்டூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி வசந்தியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு யுகந்திகா என்ற 7 வயது மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். 

மகள் மெட்டூரில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று இரவில் வீட்டில் யுகந்திகா விளையாடி கொண்டிருந்த போது கையில் சால்வை துணி ஒன்றை வைத்த கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். 

விளையாட்டு தனமாக அறையின் ஜன்னல் கம்பியில் சால்வை துணியின் ஒருபகுதியை கட்டி விட்டு, மற்றொரு பகுதியில் தன்னுடைய கழுத்தில் போட்டு சுற்றி கொண்டு விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சால்வை துணி, யுகந்திகாவின் கழுத்தை இறுக்கியுள்ளது. 

இந்த சூழ்நிலையில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாள். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மகளை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது பற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விளையாட்டு தனமாக இறந்த 3 வகுப்பு மாணவி இறந்தது பெற்றோர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Baskar

Next Post

உதயநிதி தகுதியானவர் தான்.. பாஜகவினரை வசைபாடிய கஸ்தூரி.!

Thu Dec 15 , 2022
தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் அமைச்சர் பதவி ஏற்றவுடன் அவருக்கு கருணாநிதி குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், திமுக தொண்டர்களும், நடிகர்களும், அமைச்சர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றதற்கு அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கடுமையான […]

You May Like