fbpx

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்னும் 4 நாட்களே உள்ளது? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமக்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இதுவரை மொத்தம் 1.40 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க கால அவகாசமா நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு சிறப்பு முகாம் டிச.31-ம் தேதியுடன் முடிவதால் கால அவகாசத்தை நீட்டிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்தப்பிறகு அறிவிப்பு வெளியிடப்படும். அதிகபட்சமாக இன்னும் 2 நாட்களில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் செந்தில் தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

கவனம்‌...! 2023-ல் கார் வாங்க போறீங்களா...? இந்த நிறுவனத்தின் கார்கள் விலை உயரும்...!

Tue Dec 27 , 2022
2023 ஆம் ஆண்டில் புதிய காரை வாங்க திட்டமிட்ட நபராக இருந்தால் உங்களுக்கான செய்தி இது. கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் உயரப்போகிறது. மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் கார்களின் விற்பனை விலையும் அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் உள்ள டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, கியா மற்றும் ஆடி உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தங்கள் தயாரிப்பு விலை உயர்வை அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு வரவிருக்கும் […]

You May Like