ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமணச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், ஒமிசா என்ற மகளும், நிகில் என்ற மகனும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுகன்யா, தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று, திருமண செல்வன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக சுகன்யாவின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அங்கு கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த திருமண செல்வன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சுகன்யாவும் ஒமிஷாவும் தப்பினர், ஆனால் இவர்களின் நான்கு வயது மகன் நிகில் மீது தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா மற்றும் அவரது உறவினர்களும் நிகிலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் நிகிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமலை செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய தாய்; போர்வைக்கு அடியில் இருந்து குழந்தைகள் பார்த்த காட்சி..