தெலுங்கானாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு பதிவாகியதை அடுத்து, வெளிநாட்டிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி மாவட்டத்திற்குத் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். நோயாளி தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் குவைத்தில் இருந்து கடந்த ஜூலை 6-ம் தேதி வந்தவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், ஜூலை 20-ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
அந்த நபர் ஜூலை 23 அன்று சொறிக்காண அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று மாநில பொது சுகாதார இயக்குநர் ஜி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் ஒரு ஸ்டேக் பார்ட்டியில் கலந்து கொண்டார். அவர் மூன்று நாட்களுக்கு முன்பு மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கண்டறிந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர், அந்த நபரை காமரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார், அங்கிருந்து நோயாளி இங்குள்ள காய்ச்சல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்பொழுது நோயாளியிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு, அது என்ஐவி புனேவுக்கு அனுப்பப்படும், அதுவரை நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்படுவார் என்று மாநில பொது சுகாதார இயக்குநர் ஜி ஸ்ரீனிவாச ராவ் கூறினார்.
Also Read: பெண்களே… ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா…? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்…