fbpx

“குழந்தைகளை கட்டியணைத்தபடி ரயில் முன் பாய்ந்த சோகம்..” ’40’ வயது பெண் ‘2’ குழந்தைகளுடன் தற்கொலை.! காவல்துறை விசாரணை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள், உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் தனது 8 வயது மற்றும் 10 வயது பெண் குழந்தைகளுடன் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த தாய் தனது 2 குழந்தைகளையும் கட்டி அணைத்தவாறு ரயில் முன் பாய்ந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி ரயில்வே டிஎஸ்பி மகாதேவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி பாலசுப்பிரமணியன் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரியின் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர்களின் விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்.? என்பது குறித்தும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. தாய் தன் பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’உங்கள் தோப்பனார் சொல்லியா அப்படிச் செய்தீர்கள்’..? தயாநிதி மாறனுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!!

Mon Feb 12 , 2024
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேட்ட கேள்விகள் இணையத்தில் டிரெண்டான நிலையில், இதற்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், “எங்கள் வரிப்பணத்திலிருந்து நிவாரணத் தொகையைக் கொடுங்கள். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டுக் காசை கேட்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்காக சுமார் ஒரு மணி நேரம் செய்தியாளர்கள் சந்திப்பை […]

You May Like