fbpx

மெரினாவில் 5 பேர் பலி..!! 200 பேர் காயம்..!! இதற்கு முதல்வர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்..!! அண்ணாமலை அதிரடி..!!

சென்னையில் நடைபெற்ற விமானப்படை கண்காட்சியை காண வந்திருந்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம். முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை. இது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது.

5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு. தன் குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சரையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். முதலமைச்சர் நிச்சயம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Read More : சூப்பர் திட்டம்..!! வெறும் ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சத்தை அள்ளிச் செல்லுங்கள்..!! எப்படி இணைவது..?

English Summary

BJP leader Annamalai has alleged that 5 people who had come to see the air force exhibition held in Chennai died tragically.

Chella

Next Post

பெண்ணுக்கு ரூ.36,000 ஆண் வாரிசுகளுக்கு ரூ.30,000 வழங்கும் மத்திய அரசு...! எப்படி பெறுவது...?

Mon Oct 7 , 2024
Central Government will provide Rs 36,000 to female heirs and Rs 30,000 to male heirs

You May Like