fbpx

’50’ வயது மாற்றுத்திறனாளி பெண் கொடூர கொலை.!! பாலியல் உறவுக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்.! ’17’ வயது மாணவன் வெறி செயல்.!

சேலம் மாவட்டத்தில் 50 வயது பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி(50). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெருமாயி கடந்த 11-ம் தேதி இரவு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவன் பெருமாயி வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவனை பிடித்து விசாரித்ததில் பெருமாயியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். பள்ளி மாணவன் வீட்டில் தனியாக இருந்த பெருமாயியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறான்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாயி மாணவனை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓட முயன்றிருக்கிறார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை வெளியே சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் பெருமாயியை கீழே தள்ளி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மாணவன் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

'She Said Yes' காதலர் தினத்தில் நிச்சயதார்த்தத்தை அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்.! நாட்டு மக்கள் வாழ்த்து.!

Thu Feb 15 , 2024
ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் வியாழனன்று தனது ஜோடியான ஹெய்டனுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருக்கிறார். அல்பானீஸ் சமூக ஊடகங்களில் காதலி ஹெய்டன் புதிய வைர மோதிரத்தைக் காட்டும் மகிழ்ச்சியான செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அந்தோனி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஹெய்டன் ஆகியோர் கான்பெரா நகரில் உள்ள இத்தாலியன் & சன்ஸ் என்ற உணவகத்தில் தங்களது காதலர் தினத்தை இரவு விருந்துடன் கொண்டாடினார். இதன் பிறகு […]

You May Like