ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான முகுந்த் என்ற பாபி.
இவரது நெருங்கிய நண்பர் பிரகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், பாபி அவ்வப்போது பிரகாஷ் வீட்டிற்க்கு சென்று வருவது வழக்கம். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாபி, பிரகாஷின் மனைவி குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனையடுத்து, பாபி அந்த வீடியோவை பிரகாஷின் மனைவியிடம் காண்பித்து மிரட்டியுள்ளார். இதனால் பிரகாஷின் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாபி, அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், பலாத்காரம் செய்வதையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து, நீ எனது மற்றொரு நண்பருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
ஒருகட்டத்தில் பிரகாஷ் வேலைக்கு சென்ற பின்னர், அவரது வீட்டிற்க்கு சென்று பாபி அவரது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தினமும் தான் சொல்லும் நபர்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரகாஷின் மனைவி, தனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முகுந்த் என்ற பாபியை கைது செய்தனர். மேலும், பெண்ணை பலாத்காரம் செய்த பாபியின் நண்பர்களையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அதிர்ச்சி!! பள்ளி வேனில் வந்த 10 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது கிளீனர்…