fbpx

மத்திய அரசு சார்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லாமல் 6 மாத கால இலவச பயிற்சி…!

காலணி தயாரிப்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி 6 மாத கால பயிற்சியை வழங்கவுள்ளது.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், செயல்படும் சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனம் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி 6 மாத கால பயிற்சியை வழங்கவுள்ளது. இந்தப் பயிற்சி 2024, ஜூலை 29 அன்று தொடங்கும் என்று பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சிக்கு 50 பேர் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்றும், ஒவ்வொன்றிலும் 25 பேர் பங்கேற்புடன் இரண்டு பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசிய எஸ்சி,எஸ்டி மையத்தின் ஆதரவில் நடத்தப்படும் காலணி வடிவமைப்பு, உற்பத்திக்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 18-வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் காலத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், எஸ்சி, எஸ்டி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு வண்ணப்புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். தங்கிப் பயில விரும்புவோருக்கு விடுதி வசதி உள்ளது.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள www.cftichennai.in என்ற இணையதளத்தை அல்லது 9677943633/ 9677943733 என்ற செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனத்தில் மொத்தம் 7 பாடப்பிரிவுகள் இருப்பதாகவும், இங்கு பயிற்சிப் பெற்றவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பை பெற முடியும்.

English Summary

6 months free training for SC and ST categories by central government

Vignesh

Next Post

வாவ்...! மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்...! விரிவுபடுத்திய தமிழக அரசு...!

Sat Jul 20 , 2024
Innovation girl program that gives Rs.1000 every month...! Expanded Tamil Nadu Govt

You May Like