fbpx

6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு… இது தான் நோயின் முக்கிய அறிகுறிகள்…!

ஆந்திர மாநிலத்தில் 6 வயது சிறுவன் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏ.டி.எஸ். கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவல் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மர்ரிபாடு மண்டலம், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக அச்சிறுவனை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஒரு முறை இந்த தொற்றை உறுதி செய்வதற்காக, சிறுவனின் ரத்த மாதிரி மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அந்த கிராமம் முழுவதும் உள்ள அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யவும் அமைச்சர் ராமநாராயண ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு, சிக்குன்குனியா போன்று ஜிக்கா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் வைரல் நோயாகும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கருவுற்ற பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு குஜராத்தில் முதலாவது ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் வெளியில் தெரிவதே இல்லை. சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகள் வெளிப்படுகின்றன. அதாவது காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண்கள் சிவந்து போதல், சருமத்தில் சிவப்பு நிறத் தடிப்புகள் அரிப்புடன் தோன்றும்.

English Summary

6-year-old boy infected with Zika virus… These are the main symptoms of the disease

Vignesh

Next Post

உலகிலேயே இந்த நாட்டில்தான் 92% விவாகரத்து!. இந்தியாவின் இடம் என்ன..?

Thu Dec 19 , 2024
divorce: போர்ச்சுகல் உலகிலேயே அதிக விவாகரத்து விகிதத்தைக் கொண்ட கொண்ட நாடாக உள்ளது. அங்கு விவாகரத்து விகிதம் 92% ஆக உள்ளது. விவாகரத்து என்பது சமீபத்தில் பரவலான கவனத்தைப் பெற்ற மற்றொரு சொல், இது பெரும்பாலும் தனிப்பட்ட உறவுகள், சட்டப் போர்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்கள் பற்றிய விவாதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சட்ட, சமூக மற்றும் கலாச்சார உரையாடல்களில் இது ஒரு முக்கிய தலைப்பாக மாறியுள்ளது, தனிநபர்களும் சமூகமும் திருமண பிரச்சினைகள் […]

You May Like