fbpx

ஒரே அடி ஆள் காலி .! கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட 64 வயது பெண்.! மகன் மருமகள் வெறி செயல்.!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது பெண் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பெண்ணின் மகன் மற்றும் மருமகளை கைது செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி பாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன் ராஜேந்திரா மற்றும் அவரது மனைவி ரேகாவுடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில் சொத்து தொடர்பான தகராறில் மகன் மற்றும் தாயிடையே ஏற்பட்டிருக்கிறது. அப்போது ராஜேந்திரா மற்றும் அவரது மனைவி ரேகா இருவரும் சேர்ந்து 64 வயதான ரேவதியை கிரிக்கெட் மட்டையால் அடித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் மயக்கமடைந்த அவரை இந்தூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் மருத்துவமனை அலுவலர்களிடம் கீழே விழுந்து மயங்கியதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவீந்திர மற்றும் ரேகாவை கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Next Post

ஒரு தடவை இந்த மாதிரி சமைச்சு சாப்பிட்டு பாருங்க.!கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ஆவாரம் பூ சாம்பார் ரெசிபி.!

Sun Dec 24 , 2023
எப்போதும் ஒரே விதமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அலுப்பு தட்டிவிடும். இதனால் ஏதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். இதேபோல சுவையும் மணமும் நிறைந்த ஆவாரம் பூ சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். இந்த சாம்பார் செய்வதற்கு ஒரு கப் துவரம் பருப்பு, நான்கு சின்ன வெங்காயம், ஒரு தக்காளி ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள […]

You May Like