நாகப்பட்டினம் மாவட்டம், வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 7 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமி வசித்து வரும் அதே பகுதியில், 55 வயதான குமார் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக சிறுமி அடிக்கடி கடைக்குச் வருவது வழக்கம். அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி ஒரு சில பொருட்களை வாங்குவதற்காக வழக்கம் போல் தனியாக கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமி மீது குமாருக்கு ஆசை ஏற்படவே, அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தனது தாயிடம் சென்று நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த தாய், சம்பவம் குறித்து உடனடியாக நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.