fbpx

அடி தூள்.; வேளாங்கண்ணி திருவிழாவுக்கு மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள்… அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இயக்கப்படும்…!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு பயணிக்க மொத்தம் 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தவிர குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மெகா இன்பச் செய்தி...; 9 முதல் 10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75,000 உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்....!

Fri Aug 26 , 2022
மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கிழ்‌ தேர்வு செய்யப்படும்‌ 9 மற்றும்‌ 10-ம்‌ வகுப்பு மாணவ, மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000 வீதமும்‌,11 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.1,25,000 வழங்கப்படும்‌. […]

You May Like