fbpx

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம்…! சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதிரடி…!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி இளவழகன், கரூர் மாவட்டத்துக்கும், சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில்வேலவன், சேலத்துக்கும், சென்னை போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமநாதன், கடலுார் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து, மே 13ம் தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்துள்ள, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் உட்பட 77 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி நந்தினிதேவி விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: ஆந்திராவில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கு பாஜக போட்டியிடும் நபர்…! வெளியான அறிவிப்பு

English Summary

77 district judges transferred across Tamil Nadu…! Madras High Court orders action

Vignesh

Next Post

அட்டகாசம்..! அரசு பேருந்தில் ஒரு வருடத்திற்கு 20 முறை இலவசமாக பயணம்...! எப்படி தெரியுமா..? முழு விவரம்

Tue Apr 29 , 2025
Travel 20 times a year on a government bus for free...! How do you know..? Full details

You May Like