எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.