சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி,1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், தண்ணீர்குளம் கிராமத்தில் 48 வயதான முருகேசன் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகே, 8 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமி மீது மோகம் ஏற்படவே, அவர் சிறுமியை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். அதன் படி, கடந்த சில மாதமாகவே அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துப் போன சிறுமி எதையும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், ஒரு கடத்தில் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த தாய், தனது மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Read more: கணவன் கண் முன், பாஜக பிரமுகருக்கு முத்தம் கொடுத்த மனைவி; தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த சோகம்..