கடந்த மாதத்தில் 18ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ரொரன்றோ பகுதியில் இருக்கும், யார்க் பல்கலையில் 59 வயதுடைய ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் பலமாக தாக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
இறந்தவரின் பெயர் கென் லீ (59) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து அந்த நபரைத் தாக்கியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தியானது, இந்த கொடூரச் செயலைச் செய்தவர்கள் எட்டு இளம்பெண்கள் என்றும் அவர்கள் 13 முதல் 16 வயதுடைய எட்டு இளம்பெண்கள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த 8 பெணகளும் கைது செய்த பொலிசார், அவர்களிடமிருந்து பல ஆயுதங்களைக் கைப்பற்றி உள்ளனர். விசாரணையில்
இளம்பெண்கள், அந்த நபரிடம் இருந்த மதுபான போத்தல் ஒன்றைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.