2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும், தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.. குறிப்பாக சீனாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது..

இந்நிலையில் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ இதுகுறித்து பேசிய போது “ சீனாவில் அடுத்த 2 மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.. ஏனெனில் சீனாவின் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. சீனாவில் தற்போது சந்திர புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.. இந்த விடுமுறை காலத்தில் மக்கள் அதிகமாக பயணம் செய்வதால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம்..” என்று தெரிவித்தார்..
இதனிடையே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளதால் சீனாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. சீனா தனது ஜீரோ-கோவிட் கொள்கையை திடீரென அகற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜனவரி 12 ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 60000 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளனர் என்று சீன அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன..
ஆனால் சில வல்லுநர்கள், சீனா உண்மையான எண்ணிக்கையை மறைப்பதாக தெரிவித்துள்ளது.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இறப்பவர்களை அரசு கணக்கிடுவதில்லை என்று தெரிவிக்கின்றனர்.. மேலும் பல மருத்துவர்கள் கொரோனா தான் மரணத்திற்குக் காரணம் எனக் கூற தயக்கம் காட்டுகின்றனர் என்று கூறப்படுகிறது.. எனவே சீனாவின் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை அரசு கூறும் எண்ணிக்கையை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..