சேலம் மாவட்ட பகுதியில் உள்ள எம்.கொல்லப்பட்டியில் கட்டட மேஸ்திரியான ஞானமூர்த்தி, 39 என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் நண்பரின் மகளுக்கு , வயிற்று வலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி, 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் , அங்குள்ள மகளிர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தந்தையின் நண்பர் ஞானமூர்த்தி சிக்கி கொண்டார்.
சிறுமியின் இந்த நிலைமைக்கு ஞானமூர்த்தி தான் காரணம் என்று சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை கைது மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.