வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால், பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் முன், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் 50 மாகாணங்களில் 80% இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. Cross Dependency Initiative என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. காலநிலை இடர் பகுப்பாய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப்படி, பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், கேரளா மற்றும் அசாம் ஆகியவை இந்தியாவில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மும்பையும் அதிக ஆபத்தில் உள்ளது. அதிக ஆபத்துள்ள 50 மாநிலங்களில் 9 இந்திய மாநிலங்கள் உள்ளன; சீனாவில் 26 மாகாணங்களும், அமெரிக்காவில் 5 மாகாணங்களும் இடம்பெற்றுள்ளன. சீனாவில், தரவரிசையில் பெயரிடப்பட்ட பெரும்பாலான மாகாணங்கள் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ளன. அமெரிக்காவில், கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் அதிக ஆபத்தில் உள்ளன.. இந்த மாநிலங்கள் அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.