fbpx

“சித்தி கொடுமை..” அடித்தே கொலை செய்யப்பட்ட ‘9’ வயது சிறுமி..!! பதற வைக்கும் வீடியோ காட்சி.!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் சித்தி கொடுமையால் ஒன்பது வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அவுரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பில்ஹவுரி கிராமத்தில், வசித்து வந்த 9 வயது சிறுமியின் தந்தை பர்சானா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு பர்சானா, 9 வயது சிறுமியை வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பர்சானா, 9 வயது சிறுமியை கொடூரமாக அடித்து கொலை செய்து புல்வெளியில் வீசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சிறுமியின் சடலத்தை புல்வெளியில் இருந்து மீட்டுள்ளனர். ரத்தம் தோய்ந்த ஆடையுடன் இருக்கும் சிறுமியின் உடலை பார்த்து தந்தை அழும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/inspiretrail_/status/1754120116411797565?t=5_U-D-b8bhLcFm9T3-HbuQ&s=19

Next Post

”இனி தேர்வுகளில் மோசடி செய்தால்”...!! ”10 ஆண்டுகள் சிறை”..!! ”ரூ.1 கோடி அபராதம்”..!! மக்களவையில் புதிய மசோதா தாக்கல்..!!

Mon Feb 5 , 2024
நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் வகையில், புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சனைகளை […]

You May Like