மயிலாடுதுறை மாவட்டம் கொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு 27 வயதான சுரேஷ் என்ற மகன் உள்ளார். சுரேஷ், 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாசமாக பேசியுள்ளார். இதனால் சிறுமி சுரேஷ் கூறுவதை எல்லாம் நம்பி அவருடன் தனியாக சென்றுள்ளார்.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வலி தாங்காமல் கதறி துடித்த சிறுமியிடம், இங்கு நடந்ததை குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டி வீட்டிற்க்கு அனுப்பியுள்ளார். ஆனால் வலி தாங்க முடியாமல் தவித்த சிறுமி, தனக்கு சுரேஷ் செய்த கொடுமைகளை எல்லாம் அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சுரேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, சுரேஷுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு யார் அழைத்தாலும் தனியாக செல்ல கூடாது, யார் எது கொடுத்தாலும் சாப்பிட கூடாது, யார் தங்களை தொட்டாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
Read more: சரியான தீர்ப்பு!!! மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு, கோர்ட் வழங்கிய தண்டனை..