சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் – பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் லித்திஷா என்ற மகள் உள்ளார். வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா, சமைக்காத கேரட்டை சாப்பிட்டுள்ளார். கேரட், தொண்டையில் சிக்கிய நிலையில் மயங்கி விழுந்தாள். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த லித்திஷாவின் தாயார் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தார்கள். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனால் குழந்தையின் உறவினர்கள் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டு நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தைகளை 5 வயது வரையிலும் மிக கவனமாக பெற்றோர்கள் பார்க்க வேண்டியது அவசியம். சிறு கவச்சிதறல் கூட உயிரிழப்புக்கு வழிவக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read more : பேப்பர் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்? புற்றுநோய்க்கு வழிவகுக்கும்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை