fbpx

லேப்டாப் சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் பாய்ந்து 22 வயதான பெண் உயிரிழப்பு…!

லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் விருதுநகரில் 22 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்தி குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் செந்திமயில். பி.எஸ்.சி பட்டதாரியான செந்திமயிலுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ராஜாராம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் செந்திமயில், வீட்டில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் பயிற்சி பெண் மருத்துவர் சரணிதா என்பவர் லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் விருதுநகரில் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

A 22-year-old woman was electrocuted while charging her laptop

Vignesh

Next Post

சென்னைக்கு அருகில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா..? வீக் எண்ட் பிளான் ரெடி..!

Sat Jun 15 , 2024
If you have two days off after working all week, make the most of it. Here's a look at where else to go in two days.

You May Like