சென்னை மணலி-அரியலூர் சாலை சந்திப்பில் சாலை ஓரமாக மழை நீர் கால்வாய் ஒன்று இருக்கிறது. இந்த கால்வாயில் எரிந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மணலி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தகவலின் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கே ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் மூதாட்டியின் உடல் முழுவதும் எரிந்த நிலையில், சடலமாக இருந்திருக்கிறது அதன் பிறகு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்த வடிவாம்பாள்(73) என்பதும் இவருடைய கணவர் ராஜமாணிக்கம் பல வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என்பது, மேலும் இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள் என்றும் தெரியவந்தது.
மேலும் எல்லோருக்கும் திருமணமாகி அவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருவதால் வடிவாம்பாள் மற்றும் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களும் கிடைத்திருக்கின்றன.
மூதாட்டியின் ஆடைகள் களையப்பட்டு இருந்ததாகவும், நாக்கு கடித்த நிலையில் உள்ளதால் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற விதத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.