அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நியூயார்க்கில் தனது விடுமுறையை கொண்டாடிவரும் பிரெஞ்சு தேசிய அணியின் கேப்டன் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு Ligue 1 தொடரில் PSG அணியுடன் லென்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடினார். அதன் பிறகு விடுமுறையில் உள்ள எம்பாப்பே தனது சக வீரர் அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றிருக்கிறார்.

அங்கு தனது தீவிர ரசிகரான 11 வயது சிறுவனான நோவாவை மருத்துவமனைக்கே சென்று சந்தித்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோபை Un miracle Pour Noah என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நோவாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது போலவே, கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக் கோப்பையிலும் தனக்கு கிடைக்கக்கூடிய அனைத்து போனஸ்களையும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக எம்பாப்பே உறுதியளித்திருந்தார்.