நொய்டாவில் வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் கார் கிளீனர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நொய்டாவில் உள்ள ராம்ராஜ் நகரில் ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. இங்கு பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டிடத்திற்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சுத்தம் செய்வதற்காக ஒரு நபரை அந்த கவுசிங் சொசைட்டி சார்பாக நியமித்திருந்தனர். அவர் அந்த ஹவுசிங் சொசைட்டியில் நடத்தப்பட்டிருக்கும் கார்களை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஹவுசிங் சொசைட்டி கார் கிளீன் செய்து வந்த நபரை திடீரென பணி நீக்கம் செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் அந்த நபர் ஆத்திரத்தில் செய்த காரியம் தற்போது இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. தன்னைப் பணியிலிருந்து நீக்கியதால் ஆத்திரத்தில் அந்த நபர் அங்கிருந்த 12 கார்களின் மீது ஆசிட்டை எரிந்திருக்கிறார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கிறது. அதனை யாரோ சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஹவுசிங் சொசைட்டி கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.