fbpx

நோட்…! வரும் ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் கூட்டம்…! வெளியான அறிவிப்பு…!

ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் துறைசார்ந்த இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.

முதல்நாளில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும். 2-வது நாளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், நூலகர்கள் மற்றும் இதர துறைசார் அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கத்தில் இருந்து 3 பேரும், பதிவுசெய்த சங்கங்களில் இருந்து 2 பேரும் பங்கேற்கலாம்.

Vignesh

Next Post

அதிர்ச்சி...! இந்தியாவில் இருந்து காணாமல் போனதா 500 நோட்டுகள்...? ரிசர்வ் வங்கி கொடுத்து புதிய விளக்கம்...!

Sun Jun 18 , 2023
இந்தியாவில் இருந்து ரூ.88,032 கோடியை காணவில்லை என ஏற்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 88,032 கோடி மதிப்பிலான 500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டதாகவும். ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில், 1,760.65 மில்லியன் நோட்டுகள் […]

You May Like