கர்நாடக மாநிலத்தில் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பெண் தோழியை போல பழகி வந்த போலியான நபர்களை திட்டியதால், படுகொலை செய்யப்பட்ட இளைஞர். அதாவது, கர்நாடக மாநிலத்தில், ஒரு 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உண்மையான பெண் அல்ல, போலியான பெயரில் யாரோ ஒருவர் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவர் கண்டுபிடித்து விட்டார்.
இந்நிலையில் தான், தனக்கு போலியான கணக்கில் இருந்து ரிக்வெஸ்ட் அனுப்பி, தன்னை நண்பனாக்கி பெண்களை போல பேசி ஏமாற்றிய அந்த நபர்களை கண்டபடி வசைப்பாடி அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதன் காரணமாக, குறுஞ்செய்தியின் மூலமாக அந்த போலியான நபர்களுக்கும், இந்த இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த போலி கணக்கை தொடங்கியிருந்த குழுவுக்கும், இவருக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து, பிரஜ்வல் என்ற அந்த 17 வயது இளைஞருக்கும், அந்த குழுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த குழுவை சேர்ந்தவர்கள், இந்த இளைஞர் மீது, கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர். அவர்களுடைய கோபம் சற்றும் குறையாத நிலையில், கடைசியில் அந்த இளைஞரின் உயிரையே பறிக்கும் அளவிற்கு அவர்கள் துணிந்து விட்டனர்.
அதாவது, அந்த 17 வயது இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார், அவரை வழிமறித்த சில இளைஞர்கள், திடீரென்று கடுமையாக தாக்கத் தொடங்கினர். அந்த குழுவிடமிருந்து தப்பிப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்தும், அந்த 17 வயது இளைஞரால் முடியாமல் போய்விட்டது. அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒரு இளைஞர், திடீரென்று, தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து, அந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுருண்டு விழுந்தார். இதை கண்ட அந்த கும்பல், அங்கிருந்து உடனடியாக தப்பி சென்று விட்டது. பின்னர், அந்த வழியாக சென்ற சிலர் அந்த இளைஞர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்துவிட்டு, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிர் இழந்தார். அதன் பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு, தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இது பற்றி விசாரணை நடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.