Hakimi: சீனாவின் லிஜியாங் நகரத்தில் சுற்றுலா பயணிகளின் பொருட்களை சுமந்துசென்று 3 நாட்களில் ரூ.23 லட்சம் சம்பாதித்த நாய்( Hakimi) இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் லிஜியாங் பழைய நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் Hakimi என்ற நாய் லக்கேஜ் கேரியராக வேலை செய்கிறது. ஹக்கிமி சுற்றுலாப் பயணிகளின் பொருட்களை அவர்களின் தங்குமிடத்திற்கு சுமந்து சென்று கொடுக்கிறது. இதுதவிர, புதிய சுற்றுலா பயணிகளை ஹோட்டலுக்கு அழைத்து வருகிறது. அதன்படி, இந்த Hakimi மூன்று நாட்களில் ரூ.23 லட்சம் (USD 27,000) சம்பாதித்துள்ளது. Hakimi உரிமையாளரான Xu, ஹோட்டல் ஒன்றையும் நடத்திவருகிறார். இந்தநிலையில், ஆரம்பத்தில், அவரது செல்ல நாயாக மட்டுமே வளர்த்து வந்துள்ளார். பின்னாளில் திடீரென்று, Hakimi-யின் இந்த தனித்துவமான திறமை வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து உரிமையாளர் Xu கூறுகையில்,” Hakimi எங்கள் வீட்டிற்கு வந்தபோது, அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நான் அவனை விளையாட அழைத்துச் சென்று தள்ளுவண்டியை இழுக்க முயற்சித்தபோது, அவன் அதை உடனடியாகக் கற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்று கூறினார். எந்தவொரு முறையான பயிற்சியும் இல்லாமல், Hakimi வேலையை விரைவாகக் கற்றுக்கொண்டான். மேலும், வீட்டில் உள்ள பொருட்களை Hakimi சேதப்படுத்துவது அரிது. ஏனென்றால், அவர் தனது சக்தியை வெளியே செலவிடுவதால் இருக்கலாம்,” என்று கூறினார்.
ஹக்கிமிக்கு இது விளையாட்டின் ஒரு பகுதி, மேலும் அவர் வேலையை ஒரு சுமையாகக் கருதுவதில்லை. உண்மையில், அவர் அதை மிகவும் ரசிக்கிறார். “ஒவ்வொரு முறையும் அவர் தள்ளுவண்டியை இழுக்கும்போது, அவர் விளையாட வெளியே செல்வது போல் உற்சாகமடைகிறார்,” என்று சூ கூறினார். ஹக்கிமியின் வழக்கமான பாதை லிஜியாங் பழைய நகரத்தின் தெற்கு வாயிலிலிருந்து ஹோம்ஸ்டே வரை 200 மீட்டர் மட்டுமே. விருந்தினர்களின் வேண்டுகோளின் பேரில் ஹக்கிமி ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பொருட்களை எடுத்துச் செல்வதாக சூ கூறினார்.
ஆரம்பத்தில் வெறும் வேடிக்கைக்காக மட்டுமே ஹக்கிமியின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டேன். ஆனால், அது விரைவில் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. விரைவில் ஹகிமியின் ஒவ்வொரு வீடியோவும் பத்து மில்லியன் பார்வைகளைப் பெறும் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார். மேலும், மூன்று நாட்களில் மட்டும் 200,000 யுவான் ஆன்லைன் வருமானத்தை ஹக்கிமி பெற்றுள்ளது.சமூக ஊடகங்களில், இந்த நாயின் அறிவுத்திறன் மற்றும் விளையாட்டுத்தன்மையை பாராட்டி பலர் விமர்சித்து வருகின்றனர்.