எங்கேயும் எப்போதும் பட நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நடிகர் சர்வானந்த், தனது ரேஞ்ச் ரோவர் காரில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது சாலை நடுவே இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
அதிகாலை 2 மணியளவில் சென்றபோது நேர்ந்த இந்த விபத்தில், லேசான காயங்களுடன் நடிகர் சர்வானந்த் உயிர் தப்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சர்வானந்துக்கு ஜுன் மாதம் 3ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான சர்வானந்திற்கு, கடந்த ஜனவரி மாதத்தில் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் நிச்சயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.