ஆந்திர மாநில பகுதியில் உள்ள காளஹஸ்தி நகரில் முனி ராஜா என்பவர் தனது மனைவி சுவாதியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மாதமே ஆன நிலையில் மகன் நிகில் உள்ளார்.
மகன் சில நாட்களாக வியாதிகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து மீண்டும் அவனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கணவனிடம் மனைவி கேட்டு கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முனி ராஜா இன்று காலை நேரத்தில் மகன் நிக்கில் காலினை பிடித்து தூக்கி தரையில் அடித்தே கொலை செய்துள்ளார். மேலும் அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் முனி ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ராஜாவை தேடி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.