சீனாவில் ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிகாங் நகரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை மாலை 30 பேர் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ அணைக்கப்பட்டு, இரவோடு இரவாக மீட்புப் பணிகள் முடிவடைந்தன. தீப்பிடித்ததற்கான குறிப்பிட்ட காரணம் இன்னும் வெளியாகவில்லை, கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது; சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், ஜிகோங் நகரின் உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் உள்ள 14 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு நேர மீட்பு பணி அதிகாலை 3:00 மணிக்கு முடிவடைந்தது. முதற்கட்ட விசாரணையில் கட்டுமான பணிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான குறிப்பிட்ட காரணத்தை கண்டறிய மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.