நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம்.
அந்த வகையில் இன்று, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற trainee officer, project engineer, trainee engineer போன்ற பணிகளுக்கு 10 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக, தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த பணியில் சேர விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இந்த நிறுவனத்தால், வரவேற்கப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது 28 முதல் 32 வரையில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த வயது வரம்பில் வழங்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு, தெரிந்து கொள்ளலாம்.
அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், B,Tech, BSc, BE போன்றவற்றில் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். அதே போல, இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 30,000 முதல், 40,000 வரையில் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் written test, interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு, வரும் 14.9.2023 ஆண்டு மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF