சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈசென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்றன. இதில் ஏராளமான மீனவர்கள் கடையமைத்து தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சாலையின் இரு பக்கமும் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அலுவலர்களும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பிருந்த போதும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பொடியே தாங்கள் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதன் ஒரு பகுதியாக பட்டினப்பாக்கம் ப்ளூ சாலையில் அமைந்துள்ள அனுமதி பெறாத மீன் கடைகளை மாநகராட்சி அலுவலர்களும் காவல்துறையினருடன் இணைந்து அப்புறப்படுத்தினர் அப்போது மீன் வியாபாரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் கடைகள் நடத்த அனுமதி உண்டு மற்ற இடங்களில் கடைகள் அமைக்கப்படக் கூடாது. அப்படி அமைத்தால் அதை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினரும் மாநகராட்சி அலுவலர்களும் தெரிவித்தனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் செல்ல சிலப்பு ஏற்பட்டது.